உள்ளூர் செய்திகள்
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் போராட்டம்
காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
காரைக்கால்:
ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், புதுச்சேரி முதலமைச்சருக்கு நேற்று கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தினார்.
காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 14 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி, காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் சங்க தலைவர் பழனிவேல் தலைமையில் ஏராளமானவர்கள் காரைக்கால் தலைமை தபால் நிலையத்திலிருந்து, புதுச்சேரி முதலமைச்சருக்கு போஸ்ட் கார்டு மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பினர். இதில், காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.