உள்ளூர் செய்திகள்
காரணை ஊராட்சிக்கு 24.54லட்சம் செலவில் புதிய அலுவலக கட்டிடம்- இதயவர்மன் திறந்து வைத்தார்
- திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் அதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
- ஊர் பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த காரணையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில், சுயாட்சி திட்டம் (ஆர்.ஜி.எஸ்.ஏ) 2021-2022 நிதியின் கீழ், ரூ.24.54லட்சம் செலவில் கூட்ட அரங்கம், தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, ஊராட்சி செயலர் அலுவலகம் உள்ளிட்ட அறைகளை கொண்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டது.
பணிகள் நிறைவடைந்த நிலையில் திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் அதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். காரணை ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் தமிழரசி, ஒன்றிய கவுன்சிலர் வினோத், அனைத்து வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.