கடையம் நித்யகல்யாணி அம்பாள்- வில்வ வனநாதர் கோவில் தேரோட்டம்
- சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- நாளை காலை கோவிலுக்கு சுவாமி அம்பாள் எழுந்தருளல் நடைபெறுகிறது.
கடையம்:
கடையம் நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வ வனநாதர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் கடந்த 26-ந்தேதி காலையில் ஏக சிம்மாசன, அபிஷேகம், பூத சிம்ம வாகனத்தில் எழுந்தருளல் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து 27-ந்தேதி காலை ஏக சிம்மாசனம், பின்னர் அபிஷேகம் திருத்தேர்கால் நாட்டுதல் நடந்தது. 5-ந் திருநாள் இரவு இந்திர வாகனங்களில் எழுந்த ருளல், சுவாமி- அம்பாள் ஊடல் தீபாராதனை நடைபெ ற்றது. 6-ந் திருநாளான வெள்ளிக்கிழமை காலை அபிஷேகம், தீபாராதனை நடை பெற்றது. இரவில் யானை அன்ன வாகனங்களில் எழுந்தருளல் நடைபெற்றது. 7-ந்திருநாளான ஞாயிற்று க்கிழமை காலையில் அபிஷேகம், தீபாராதனை சிறப்பு பூஜை, மாலையில் நடராஜர் அபிஷேகம், நடராஜர் இவப்பு சாத்தி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து 8-ந் திருநாளான நேற்று மாலை நடராஜர் பச்சை சாத்தி , பூங்கோவில் கங்காளநாதர் எழுந்தருளல் நடைபெற்றது. விழாவில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அபிஷேகம், தீபாராதனை, சுவாமி ரதத்திற்கு எழுந்தருளல் நடைபெற்றது.
பின்னர் சுவாமி-அம்பாள் தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. இதையடுத்து மாலையில் தேர் வலம் வருதல் நடைபெறுகிறது.
இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
10-ந் திருவிழாவான நாளை காலை 11 மணிக்கு கோவிலுக்கு சுவாமி அம்பாள் எழுந்தருளல் நடைபெறுகிறது. இதையடுத்து கொடி இறக்குதல், தீர்த்தவாரி அபிஷேகம் நடைபெறுகிறது. விழாவில் ஒவ்வொரு நாள் மாலையில் திருமுறை இன்னிசை நடை பெறுகிறது. திருவிழாவானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்களால் நடத்தப்பட்டது.