உள்ளூர் செய்திகள்
ஓசூர் பிருந்தாவன் நகர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை விழா தொடங்கியது
- முருகருக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
- பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
ஓசூர் பிருந்தாவன் நகரில் உள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் கோவிலில் 11-ஆம் ஆண்டு கந்த சஷ்டி மற்றும் லட்சார்ச்சனை விழா நேற்று தொடங்கியது. .
முதல் நாளான நேற்று, வாஸ்து பூஜை, கணபதி ஹோமம்,காப்பு கட்டுதல்,சுப்ரமணிய ஹோமம், முருகருக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, தேவார திருமுறை மற்றும் திருப்புகழ் பாடல்கள் சுதாகர் ஓதுவார் மூலமாக பிரசங்கம் நடைபெற்றது. விழாவில், பிருந்தாவன் நகர், லட்சுமிநாராயண நகர், என்.ஜி.ஜி.ஓ.எஸ். காலனி, கிருஷ்ணா நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளிலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.