கூட்டத்தில் பால ஜனாதிபதி பேசியபோது எடுத்த படம்
சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் உதய தின விழா ஆலோசனைக் கூட்டம்
- மத போர்வையில் ஆலய விழாக்களில் அரசியல் மாநாடு நடத்துகிற அநாகரீக போக்கை பாரதிய ஜனதா கட்சி கையில் எடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
- பா.ஜ.க., ஆலய வளாகத்துக்குள் மதமாநாடு என்ற போர்வையில் அர சியல் மாநாடு நடத்துவதை கைவிட வேண்டும்.
கன்னியாகுமரி:
சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் உதய தினவிழா ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அய்யா வைகு ண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை தலைவர் பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சி.ராஜன், ஆர்.எஸ்.பார்த்த சாரதி, சத்தியசேகர், பால்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாசி 20-ந் தேதி அய்யா வைகுண்டசாமி உதய தினவிழாவை சிறப்பாக கொண்டாடுவது எனவும், இதையொட்டி மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து குரு. பால ஜனாதிபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆலய திருவிழாக்களைப் பொருத்தவரை மாநாடு என்ற பெயரில் அரசியல் பேசுவது அவசியமற்றது. மத விரோதமானது. சில அமைப்புகள் ஆலய வளாக த்துக்குள் மாநாடு நடத்து வதற்கு சில சூழ்நிலைகளில் அனுமதி அளித்திருக்கலாம். அந்த மாநாடுகள் அந்த மதங்களின் பெருமைகளைப் பற்றி பேசுவதாக அமைந்து இருக்கிறது.
ஆனால் அண்மை கால மாக மத போர்வையில் ஆலய விழாக்களில் அரசி யல் மாநாடு நடத்துகிற அநாகரீக போக்கை பாரதிய ஜனதா கட்சி கையில் எடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மண்டைக்காட்டில் 80 ஆண்டுகளுக்கு மேலாக மாநாடு நடத்தியுள்ளோம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தற்போது அங்கு நடைபெறும் மாநாடு மதம் போதிக்கும் ஆன்மீக மாநாடாக நடத்தப்படாமல் மத வெறுப்பை எடுத்துச் சொல்லுகிற பா.ஜ.க. வின் பொதுக்கூட்டம் போன்று நடத்துவது கண்டிக்கத் தக்கது.
இந்த பிரச்சினையில் அறநிலையத் துறையின் முடிவு நியாயமானதாக உள்ளது. மத நம்பிக்கையை பாது காப்பதாகவும் அமை கிறது. குமரி மாவட்டத்தில் இந்து ஆலயத்தின் திருப்பணி களுக்காகவும், வளர்ச்சிக்காகவும் மாநில அரசு ரூ. 100 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசின் மக்கள் நல திட்டங்களை அரசியல் களத்தில் சந்திக்க முடி யாத பா.ஜ.க., ஆலய வளா கத்துக்குள் மதமாநாடு என்ற போர்வையில் அர சியல் மாநாடு நடத்து வதை கைவிட வேண்டும். மேலும், அரசின் முடிவுக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.