சாமிதோப்பு பூஜிதகுரு பால பிரஜாபதி அடிகளார்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மண்டகப்படி முறை கொண்டு வர வேண்டும்
- பால பிரஜாபதி அடிகளார் கோரிக்கை
- மண்டைக்காடு பொன்னம்மை நாடாத்தி பெயரால் நாடார்கள் சமூகம் தன் குல தெய்வத்திற்கு சிறப்பு செய்ய தயாராக உள்ளது.
கன்னியாகுமரி:
சாமிதோப்பு பூஜிதகுரு பால பிரஜாபதி அடிகளார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மண்டைக்காடு கோவி லில் பாரம்பரிய கொடை விழாவினை பண்டைத் தமிழர் பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும். இந்து நாடார்களுக்கு குலதெய்வமாக விளங்கும் அம்மனுக்கு முழுக்க முழுக்க ஆரிய ஆதிக்க முறைப்படி முறைகளை முன்னெடுப்பது ஏற்புடையதல்ல.
ஆதிக்கம் செலுத்திய திருவிதாங்கூர் மனுதர்ம வழி அரசு கோவிலை கையகப் படுத்திய பின்னால்தான் தமிழ் மரபு முற்றிலும் அகற்றப்பட்டது. திருத்தமிழர் போராட்டம் நடத்தி தமிழ் மரபுக்காக தியாகங்கள் பல செய்து தாய் தமிழகத்துடன் குமரி மாவட்ட பகுதி இணைக்கப்பட்டது.
கோவில்கள் தமிழக அரசின் இந்து அற நிலையத் துறையுடன் இணைக் கப்பட்டது. ஆனால் கோவி லின் நடைமுறை ஆரிய மனுதர்ம ஆதிக்கத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. தமிழ் நாட்டில் குமரி மாவட்டம் தவிர பிறபகுதிகளில் அனைத்து கோவில்களிலும் மண்டகப்படி முறை நடைமுறையில் உள்ளது.
திருச்செந்தூர் கோவில், பாபநாசம் கோவில், தென்காசி கோவில் போன்ற அனைத்துகோவில்களிலும் நடக்கும் விழாக்களை மண்டகப்படி கட்டளை காரர்களே காலம் காலமாக நடத்தி வருகிறார்கள். அங்கெல்லாம் ஒரு நாள் திருவிழா நடத்தும் உரிமை நாடார் சமூகத்திற்கான மண்டகப்படிக்கு அனு மதிக்கப்பட்டுள்ளது .
இதுபோல் மண் டைக்காட்டிலும் பண்டைய முறையை பின்பற்ற வேண்டும். இந்து நாடார்களுக்கு மண்ட கப்படி வழங்கப்பட வேண்டும். முதல் நாள் கொடிக்கயிறு கொடுக்கும் மரபினை தொடர்ந்து ஒன்றாம் திருவிழா மண்ட கப்படியினை நாடார் சமூகத்திற்கு தமிழக அரசு வழங்க வேண்டும். பிற சமூகங்களுக்கும் உரிய மண்டக படிகளை வழங்க வேண்டும்.
முதல் நாள் திருவிழாவை உலகம் வியக்கும் வண்ணம் தான தர்மங்கள், மலர் அலங்காரங்கள், சிறப்பு நாதஸ்வர கச்சேரிகள், தமிழிசை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கையுடன் கொண்டாட தயாராக உள்ளனர். மண்டைக்காடு பொன்னம்மை நாடாத்தி பெயரால் நாடார்கள் சமூகம் தன் குல தெய்வத்திற்கு சிறப்பு செய்ய தயாராக உள்ளது. எனவே தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.