உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

திருவட்டார் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2023-01-04 07:27 GMT   |   Update On 2023-01-04 07:27 GMT
  • பிணத்தை கைப் பற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
  • திருவட்டார் போலீசார் விசாரணை

கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சுல்பிகர் (வயது 34). இவருடன் பிறந்தவர்கள் 3 பேர். இவரின் மூத்த அண்ணன் அம்ஜித்கான். இவர் கேரளா மாநிலம் மலப்புறம் பகுதியை சேர்ந்த ஷாகிதா என்பவரை திருமணம் செய்து கொண்டு சுமார் 7ஆண்டுகளாக மலப்புறத்தில் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

தற்போது 2 ஆண்டுகளாக மேக்காமண்டபம் பகுதியில் இறச்சிவெட்டும் தொழில் செய்து வந்தார். அந்த பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். இவரது மனைவி மலப்பு றத்தில் சொந்தமாக இடம் வாங்கினார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது சம்பவத்தன்று கணவன் மனைவிக்கும் தொலைபேசி மூலம் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பிறகு மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர், போன் எடுக்கவில்லை. உடனே சந்தேகம் அடைந்த மனைவி கணவரின் தம்பியை தொடர்பு கொண்டு கூறி யிருக்கிறார். அவர் வீட்டில் சென்று பார்க்கும்போது அவர் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.

உடனே இவரது தம்பி சுல்பிகர் திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தார் திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்குபதிவு செய்து பிணத்தை கைப் பற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News