உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் ஒரே இடத்தில் 264 மாணவ-மாணவிகள் திரண்டு யோகா உலக சாதனை - ஒரு நிமிடம் 55 வினாடிகளில் செய்து அபாரம்
- தேசிய அளவிலான யோகா போட்டி கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தர் கேந்திர வளாகத்தில் நடந்தது.
- 264 யோகா மாணவ- மாணவியர்கள் "உஸ்ட்ராசனம்" என்ற ஆசனத்தை ஒரு நிமிடம் 55 வினாடிகளில் செய்து உலக சாதனை
கன்னியாகுமரி :
இந்திய தேசிய யோகா கூட்டமைப்புசங்கம் மற்றும் தனுர்வேத் குருகுல ட்ரஸ்ட், விவேகா கலாச்சார விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் முதலாவது தேசிய அளவிலான யோகா போட்டி கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தர் கேந்திர வளாகத்தில் நடந்தது.
இதில் 264 யோகா மாணவ- மாணவியர்கள் "உஸ்ட்ராசனம்" என்ற ஆசனத்தை ஒரு நிமிடம் 55 வினாடிகளில் செய்து உலக சாதனை புரிந்துள்ளார்கள்.
இந்த சாதனையானது கனடிய அமேஸிங் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த சாதனைக்காக அகில இந்திய அளவில் மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சான்றுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.