உள்ளூர் செய்திகள்

குலசேகரம் அருகே கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

Published On 2023-10-12 07:14 GMT   |   Update On 2023-10-12 07:14 GMT
  • மருத்துவ கழிவுகளை பெரிய பிளாஸ்டிக் கவரில் கட்டி வைத்திருந்தார்கள்.
  • டிரைவரிடம் கடிதம் எழுதி வாங்கி கொண்டு வண்டியை திருப்பி அனுப்பினர்.

திருவட்டார் :

குலசேகரம் அருகே அரசுமூடு பகுதியில் குலசேகரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அதிவேகமாக கேரளா விலிருந்து வந்த ஒரு மினி கன்டெய்னர் வண்டியை நிறுத்தி சோதனை செய்த னர். அதில் உணவு கழிவுகள் ஆடு, மாடு ஆகியவற்றின் கழிவுகளை பேரலில் அடைத்து வைத்திருந்தனர். மேலும் மருத்துவ கழிவுகளை பெரிய பிளாஸ்டிக் கவரில் கட்டி வைத்திருந்தார்கள். வண்டியை திறந்து பார்த்த போது கடுமையான தூர்நாற்றம் வீசியது.

இந்த கழிவுகளை பொன்மனை மங்கலம் பகுதியில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு கொண்டு வந்து இரவோடு இரவாக கொட்டி கொண்டு திரும்ப சென்று விடுவார்கள் என கூறப்படுகிறது. நேற்று கோழி கழிவுகள கொண்டு வந்த வண்டியை குலசேகரம் போலீசார், பேருராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். பிடிப்பட்ட வாகனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து டிரைவரிடம் கடிதம் எழுதி வாங்கி கொண்டு வண்டியை திருப்பி அனுப்பினர்.

Tags:    

Similar News