உள்ளூர் செய்திகள்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத திருவிழா
- கொடியேற்றத்துடன் தொடங்கியது
- தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன் குமார் செய்திருந்தார்.
திருவட்டார் :
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து காலை நிர்மால்யம், ஸ்ரீ பூத பலியைத் பூஜை நடைபெறுகிறது
இரவில் சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது. கொடியேற்று நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டனர்.
நாளை 2.-ம் நாள் காலை 8 மணிக்கு நவநீதம் நாராயணியம் சமிதி வழங்கும் நாராயணீய பாராயணம், இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி, 10 மணிக்கு பிரகலாத சரிதம் கதகளி, ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன் குமார் செய்திருந்தார்.