உள்ளூர் செய்திகள்

கணபதிபுரத்தில் ரூ.10 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் - எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-08-01 07:48 GMT   |   Update On 2022-08-01 07:48 GMT
  • விழாவில் கணபதிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீவித்யா, பஞ்சாயத்து துணைத் தலைவர் ஹலன் பேபிசந்திரா பங்கேற்பு
  • கணபதிபுரம் தெக்கூர் ஊர் தலைவர் சுப்பிரமணியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி :

ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரத்தில் ரூ.10 லட்சம் செலவிலான காங்கிரீட் தளம் அமைக்கும் பணியினை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

விழாவில் கணபதிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீவித்யா, பஞ்சாயத்து துணைத் தலைவர் ஹலன் பேபிசந்திரா, மேலச்சங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்து சரவணன் வக்கீல்கள் ஜெயச்சந்திரன், பத்மநாபன், ஒன்றிய பாஜக தலைவர் பொன் சுரேஷ், ஒன்றிய பாஜக பொருளாளர் சுகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மது சூதனப்பெருமாள், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் ரூபின், மாவட்ட மகளிர் அணி தலைவி சத்திய ஸ்ரீ ரவி, தமிழ் இலக்கியப் பிரிவு மாவட்ட துணை தலைவர் லிங்கேஸ்வரன், எஸ்பி கண்ணன் கணபதிபுரம் தெக்கூர் ஊர் தலைவர் சுப்பிரமணியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News