உள்ளூர் செய்திகள்

ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

Published On 2023-07-22 07:09 GMT   |   Update On 2023-07-22 07:09 GMT
  • கொழுக்கட்டை, கூழ் படைத்து வழிபட்டனர்
  • பல்வேறு இடங்களில் கஞ்சி கலச ஊர்வலம் நடந்தது.

நாகர்கோவில், ஜூலை.22-

ஆடி மாதம் அம்மனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், திருமணங்கள் கை கூடும் என்பது ஐதீகம். அம்மன் பிறந்த நாளை ஆடிப்பூர விழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

இன்று ஆடிப்பூர விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத் தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப்பூ ரத்தையொட்டி இன்று காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.கோவில்களில் பெண் கள் கூழ் படைத்தும், கொழுக்கட்டை அவிழ்த்து படைத்தும் வழிபாடு செய்தனர். பல்வேறு இடங்களில் கஞ்சி கலச ஊர்வலம் நடந்தது.

நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் இன்று காலையில் நடை திறக்கப் பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவிலில் சாமி தரிசனத்திற்கு காலையி லேயே பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.

அவ்வையார் அம்மன் கோவிலில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர் கள் வந்து வழிபட்டு சென்றனர். கொழுக்கட்டை, கூழ் படைத்து வழிபட்டனர்.

சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கிராமப்புறங்களில் உள்ள பல்வேறு அம்மன் கோவிலில் இன்று காலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் கூழ் படைத்து வழிபாடு செய்தனர். அம்மன் கோவிலில் அன்ன தானமும் வழங்கப்பட்டது

Tags:    

Similar News