ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா
- கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொள்கிறார்.
- 13-ந் தேதி இரவு தேர் பவனி நடைபெறுகிறது.
நாகர்கோவில் :
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலமும் ஒன்று. இந்த ஆலயத்தில் நாளை (5-ம் தேதி) திருவிழா தொடங்குகிறது. வருகிற 14-ந்தேதி வரை விழா நடக்கிறது.
திருவிழா நாட்களில் தினமும் திருப்பலி, ஆண்டு விழா, சிறப்பு ஜெப வழிபாடு, அன்பில் விருந்து, மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா தொழிலாளர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள், திருவிருந்து திருப்பலி, நற்கருணை பவனி, திருமுழுக்கு திருப்பலி, சிறப்பு மாலை ஆராதனைகள், மலையாள திருப்பலி ஆகியவை நடை பெறுகிறது.
கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொள்கிறார்.
மேலும் 13-ந் தேதி இரவு தேர் பவனி நடைபெறுகிறது. 10-ம் திருவிழா நாளில் பகல் 12 மணிக்கு ஆடம்பர தேர் பவனியும், மாலை 7 மணிக்கு தேர் திருப்பலியும் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை அருட்தந்தை ஸ்டான்லி சகாயம், துணைத் தலைவர் அலெக்சாண்டர், செயலாளர் ராஜபாலன், துணைச் செயலாளர் கலாமேரி, பொருளாளர் ஆன்றோ சசி மற்றும் பங்கு இறை மக்கள், அருட் சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை, பங்கு இணை தந்தையர்கள் செய்து வருகின்றனர். திருவிழாவையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விழாக்கால சிறப்பு பேருந்து இயக்கப் படுகிறது.