மாணவருக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கு காதலி கிரீஷ்மாவை இன்று குமரி மாவட்டம் அழைத்து வந்து போலீசார் விசாரணை
- திடீர் உடல் நலக்குறைவால் கேரள ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்ட ஷாரோன்ராஜ் கடந்த 25-ந் தேதி இறந்தார்.
- கிரீஷ்மா-ஷாரோன்ராஜ் சுற்றித் திரிந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இதற்காக கிரீஷ்மாவை இன்று குமரி மாவட்டம் அழைத்து வந்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்தவர் சிந்து. இவரது மகள் கிரீஷ்மா ( வயது 23).
இவருக்கும் குமரி மாவ ட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவர் ஷாரோன் ராஜ் (25) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் கல்லூரியில் படிக்கும் போது ஏற்பட்ட பழக்கமே காதலாக மாறி உள்ளது.இந்த நிலையில் திடீர் உடல் நலக்குறைவால் கேரள ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்ட ஷாரோன்ராஜ் கடந்த 25-ந் தேதி இறந்தார்.
இது தொடர்பாக அவரது தந்தை ஜெயராஜ், பாற சாலை போலீசில் புகார் கொடுத்தார். அதில், காதலி கிரீஷ்மாவை வீட்டில் சந்தித்து விட்டு வந்த பிறகு தான், தனது மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போனதாக குறிப்பிட்டு இருந்தார். இது குறித்த வழக்கை திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, விஷம் கொடுத்து ஷாரோன்ராஜ் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவரது காதலி கிரீஷ்மா தான் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருப்பதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது அவர், காதலன் ஷாரோன்ராஜிக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து விஷ பாட்டில் உள்ளிட்ட தடயங்களை அழித்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய் மாமா நிர்மல் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், கிரீஷ்மா வுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமண நிச்சய தார்த்தம் நடந்திருப்பதும் அதனால் தான் காதலனை கொலை செய்ய திட்ட மிட்டதும் தெரிய வந்தது. இதற்கிடையில், கிரீஷ்மாவுக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜாதகத்தில் உள்ளதாகவும் அதனால் தான் காதலனை திருமணம் செய்து பின்னர் கொலை செய்ய அவர் திட்ட மிட்டதாகவும் கூறப்பட் டது.
அதன்படி அவரை திருமணம் செய்த கிரீஷ்மா, கடந்த சில மாதங்களாகவே ஷாரோன் ராஜை கொலை செய்ய முயற்சித்திருப்ப தும், இதற்காக அவரை பல சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து தங்கியதும் தெரிய வந்தது. மேலும் அங்கு 'ஜூஸ் சேலஞ்ச்' என்ற பெயரில் ஷாரோன்ராஜிக்கு குளிர்பானத்தில் மெல்ல கொல்லும் விஷம் கலந்து கொடுத்ததாகவும் போலீசாரிடம் கிரீஷ்மா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் போலீசார், கிரீஷ்மாவை அவர் காதலனுடன் சென்ற இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிட்டனர். அதன்படி முதலில் கிரீஷ்மாவை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு ஷாரோன்ராஜிக்கு குளிர்பானம் கலந்து கொடுத்த பாத்திரம் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து கிரீஷ்மாவை கேரளா அழைத்துச் சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவர் ஷாரோன்ராஜூடன் செல்போனில் பேசிய ஆடியோவை போலீசார் ஏற்கனவே கைப்பற்றி உள்ளனர். அதில் இருப்பது கிரீஷ்மாவின் குரல் தானா என்பதை உறுதி செய்ய நேற்று கிரீஷ்மாவுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும் அவர், ஷாரோன் ராஜை திருமணம் செய்த தாக கூறப்படும் வெட்டுகாடு தேவலாயத்திற்குஅழைத்துச் சென்று விசாரணை நடத்தி னர். அப்போது திருமணம் செய்த இடத்தையும் செல்பி எடுத்துக் கொண்ட இடத்தையும் போலீசாரிடம் கிரீஷ்மா காட்டியுள்ளார்.
இன்று காலை குமரி மாவட்டத்தில் கிரீஷ்மா-ஷாரோன்ராஜ் சுற்றித் திரிந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இதற்காக கிரீஷ்மாவை இன்று குமரி மாவட்டம் அழைத்து வந்தனர்.
ஷாரோன்ராஜை அவர் சந்தித்தது, காதல் மலர்ந்தது போன்றவை குறித்து கிரீஷ்மாவிடம் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து அவரை திற்பரப்பு, பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று போலீ சார் விசாரணை நடத்த உள்ளனர்.