கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி சார்பில் சாதனை படைத்த பெண்களுக்கு விருது
- மாதரே டி- 23 என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
- கல்லூரி மாணவ - மாணவிகளின் பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், கிராமிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அடுத்த படாளம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதிக்கும் பெண்களை கவுரவிக்கும் வகையில் மாதரே டி- 23 என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரியின் மேலாண்மை இயக்குனர் டாக்டர். அண்ணாமலை ரகுபதி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் டாக்டர். மீனாட்சி அண்ணாமலை முன்னிலை வகித்தார். முதல்வர் காசிநாத பாண்டியன், டீன் சுப்பாராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நதி தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் மது சரண்வேல் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் நடிகை லிஜோ மோல், புத்தக உரையாசிரியர் ஆனந்தி, பின்னணிப் பாடகி மாளவிகா சுந்தர், துணை நடிகை வினோதினி சின்னத்திரை நகைச்சுவை நடிகை சுனிதா கோகை, கார் பந்தய வீராங்கனை ஸ்ரேயா லோகியா, வியாபாரத் துறை வல்லுநர் மினுஅகர்வால், சிலம்பத்தில் உலக சாதனை புரிந்த சுகிதா, உணவு வல்லுனர் ஷர்மிளா , நடிகை கார்த்திகா, சமூக சேவகி சித்ரா தேவி மற்றும் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவியும் தொழில திபருமான பார்வதி ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் கல்லூரி மாணவ - மாணவிகளின் பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், கிராமிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.