உள்ளூர் செய்திகள்
கரூர் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்பு குறித்த ஆராய்ச்சி பயணம்
- மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறையில் மாணவிகள் காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் சிக்கிரி நிறுவனத்திற்கு சென்றனர்.
- இந்நிகழ்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 2 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்:
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறையில் மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் சிக்கிரி நிறுவனத்திற்கு சென்றனர். அங்கு வேதியியல் அரி மானம், ஆற்றல் மூல ஆதாரங்கள் மற்றும் கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்பு போன்றவற்றை விபரமாக கேட்டு தெரிந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 2 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.