உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி

Published On 2022-09-16 13:56 IST   |   Update On 2022-09-16 13:56:00 IST
  • பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடந்தது.
  • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது

கரூர்:

கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது.

இந்த சைக்கிள் போட்டிகள், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து தொடங்கி திருமாநிலையூர் ரவுண்டானா சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டரங்கம் வரை 10 கிலோ மீட்டர் தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து தொடங்கி கரூர் பஸ் நிலைய ரவுண்டானா வரை சென்று மீண்டும் விளையாட்டரங்கம் வரை 15 கிலோ மீட்டர் தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து தொடங்கி கரூர் பஸ் நிலைய ரவுண்டானா வரை சென்று மீண்டும் விளையாட்டரங்கம் வரை 15 கிலோ மீட்டர் தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து தொடங்கி சேலம் பைபாஸ் ரவுண்டானா வரை சென்று மீண்டும் விளையாட்டரங்கம் வரை 20 கிலோ மீட்டர் தூரமும் நடைபெற்றது இப்போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதமும், 4 முதல் 10 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.250 வீதமும் பரிசுத்தொகை காசோலையாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News