உள்ளூர் செய்திகள்
கரூரில் மளிகை கடையில் பணம் திருட்டு-ஊழியர் கைது
- மேலாளர் மதன்பாபு கடை விற்பனை தொகையை எண்ணி பார்த்தப்போது ரூ.20,000 குறைந்தது.
- கடையின் சிசிடிவி காமரா பதிவுகளை சோதித்ததில்பிசதீஷ் பணபெட்டியில் இருந்து ரூ.20,000த்தை திருடியது தெரியவந்தது.
கரூர்
கரூர் பழைய புறவழிச்சாலையில் மொத்த மளிகை விற்பனை கடை உள்ளது. இந்நிறுவன மேலாளர் மதன்பாபு (வயது38). பில்லிங் ஊழியர் சதீஷ் (25) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மேலாளர் மதன்பாபு நேற்று முன்தினம் கடை விற்பனை தொகையை எண்ணி பார்த்தப்போது ரூ.20,000 குறைந்தது.
இதையடுத்து கடையின் சிசிடிவி காமரா பதிவுகளை சோதித்ததில் கடையின் பில்லிங் ஊழியர் சதீஷ் பணபெட்டியில் இருந்து ரூ.20,000த்தை திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து கரூர் நகர போலீஸில் மேலாளர் மதன்பாபு அளித்த புகாரின்பேரில் போலீஸார் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.20,000 பறிமுதல் செய்யப்பட்டது.