உள்ளூர் செய்திகள்
ஆட்டுக்குட்டியை காப்பாற்றிய போது விபரீதம்-வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
- ஆட்டுக்குட்டியை காப்பாற்றிய போது வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்
- ஆட்டுக்குட்டி அருகில் உள்ள 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தது.
கரூர்:
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள தாராபுரத்தானூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ராஜா (வயது 23). இவர் அப்பகுதியில் உள்ள பொட்டல் காட்டில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு ஆட்டுக்குட்டி அருகில் உள்ள 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தது. இதைக் கண்ட அவர் ஆட்டுக்குட்டியை காப்பாற்ற கிணற்றில் இறங்கினார்.
அப்பொழுது அவர் கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாத ராஜா தண்ணீரில் தத்தளித்து கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் முசிறி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து ராஜாவின் உடலை மீட்டனர். இது குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.