உள்ளூர் செய்திகள்
- வேலைக்கு சென்ற இளம் பெண் மாயமானார்
- வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
கரூர்:
தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டி கிழக்கு தெருவில் வசிப்பவர் சின்னையன் மற்றும் அண்ணக்கிளி தம்ப தியினரின் மகள் சவுந்தர்யா (வயது 24). இவர் திருச்சி இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள ஒரு பெயின்ட் கடையில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சவுந்தர்யா வேலைக்கு சென்று வருவதாக தனது பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு சென்று உள்ளார். பின்னர் அன்று இரவு முழுவதும் சவுந்தர்யா வீட்டிற்கு வரவில்லை என்பதால் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி