உள்ளூர் செய்திகள்
- வீட்டில் இருந்த தொழிலாளி மாயமானார்
- வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை
கரூர்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பா ளையம், வேலுார் சாலையை சேர்ந் தவர் ரவி (வயது 52), கூலி தொழிலாளி. இவர் கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது மனைவி மகேஸ்வரி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரவியை யாராவது கடத்தியிருப்பார்களா? அல்லது வேறு எங்கும் சென்றிருப்பாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.