உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆக்சிஜன் இருப்பு, கொரோனா வார்டுகளை பார்வையிட்டார். 

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை பணிகள்

Published On 2023-04-11 15:29 IST   |   Update On 2023-04-11 15:29:00 IST
  • கிருஷ்ணகிரியில் டவுனில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை பணிகள் நேற்று நடந்தது.
  • கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆக்சிஜன் இருப்பு, கொரோனா வார்டுகளை பார்வையிட்டார்.

கிருஷ்ணகிரி,

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா, 2020-ம் ஆண்டு இந்தியாவில் பரவ தொடங்கியது.

2020-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பரவ தொடங்கிய கொரோனா அனைத்து மாவட்டங்களிலும் வேகமாக பரவியது. இதன் காரணமாக சுமார் 40 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா முதல் அலையில் பலர் உயிர் இழந்தனர்.

இதன் தொடர்ச்சியாக 2021-ம் ஆண்டு கொரோனா வேகமாக பரவியது. இந்த 2-வது அலையில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர்.

கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி முதல் மற்றும் 2-வது டோஸ், பின்னர் பூஸ்டர் டோஸ்கள் போட அறிவுறுத்தப்பட்டன.

மேலும் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு (2022) கொரோனா பரவல் வெகுவாக குறைந்து மக்கள் சகஜ நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நாள்தோறும் 6 ஆயிரம் பேர் நாடு முழுவதும் பாதிக்கப்படுகிறார்கள்.

உருமாறிய புதிய வகை வைரஸ் என சுகாதாரத்துறை நிபுணர்கள் கணித்துள்ளனர். தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நாடு முழுகூதும் நேற்றும், இன்றும் கொரோனா தடுப்பு தயார் நிலை ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நடந்தது. கிருஷ்ணகிரியில் டவுனில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை பணிகள் நேற்று நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆக்சிஜன் இருப்பு, கொரோனா வார்டுகளை பார்வையிட்டார். மேலும் கொரோனா பரிசோதனை கருவிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கேட்ட அவர், கொரோனா வார்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அப்போது மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜஸ்ரீ, மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், உள்தங்கும் மருத்துவ அலுவலர்கள் செல்வி, ராஜா, மாது உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News