உள்ளூர் செய்திகள்
சீர்காழி மங்கையர்க்கரசி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி மங்கையர்கரசி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிந்தன.
இதையடுத்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது.
அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுர கலசத்திற்கு ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.