உள்ளூர் செய்திகள்

கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,142 பேருக்கு கொரோனா

Published On 2022-07-19 21:39 IST   |   Update On 2022-07-19 21:40:00 IST
  • சென்னையில் 561 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
  • கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில மக்கள் நலவாழ்வு மற்றும் மருத்துவத்துறை தகவல் வெளியிட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,142 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 22 ஆயிரத்து 142 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2,219 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.

கொரோன தொற்று பாதிப்பை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 31,116 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தலைநகர் சென்னையில் இன்று 561 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

Tags:    

Similar News