சென்னையில் நடந்த 7-வது ஆசிய கோப்பை ஆடவர் ஆக்கி சாம்பியன் போட்டிகளை பொதுமக்கள் பார்வைக்காக நேரடி ஒளிபரப்பினை தருமபுரி டவுன் பஸ் நிலையத்தில் கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அருகில் தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி. வெங்கடேஸ்வரன் உள்ளார்.
தருமபுரி பஸ் நிலையத்தில் ஆசிய கோப்பை ஆக்கி போட்டிகள் நேரடி ஒளிபரப்பு
- ஹாக்கி சாம்பியன் போட்டி வரும் 12.8.2023 வரை நடைபெற உள்ளது.
- தருமபுரி டவுன் பஸ் ஸ்டேண்டில் மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தருமபுரி,
7-வது ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி சாம்பியன் போட்டிகள் சென்னையில் நேற்று தொடங்கிய நிலையில் வரும் 12.8.2023 வரை நடைபெற உள்ளது.
இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. போட்டிகளை பொதுமக்கள் பார்வைக்காக நேரடி ஒளிபரப்பினை தருமபுரி டவுன் பஸ் ஸ்டேண்டில் மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
உடன் தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன், வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, நகர மன்ற தலைவர் லட்சுமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் உள்ளனர்.