உள்ளூர் செய்திகள்

வெள்ளி தேரில் முருகப்பெருமாள் வீதிஉலா நடந்தது.

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் வெள்ளி தேரில் முருகபெருமான் வீதிஉலா

Published On 2023-09-06 15:09 IST   |   Update On 2023-09-06 15:09:00 IST
  • முருகனுக்கு பல்வேறு திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவ ட்டம் சிக்கலில் சிங்கார வேலவர் கோவில் அமை ந்துள்ளது. முருகப்பெருமான் அன்னை வேல் நெடுங்க ண்ணிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்ததாக கந்த புராண வரலாறு புகழ்மிக்க இந்த கோவிலில் கார்த்திகை சஷ்டியை முன்னிட்டு வெள்ளி தேரில் முருகப்பெ ருமாள் சுவாமி வீதி உலா நடைபெற்றது. முன்னதாக வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெ ருமானுக்கு பால், பன்னீர், தேன், விபூதி,பஞ்சா மிர்தம் உள்ளி ட்ட திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்ட முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெள்ளித் தேரில் எழுந்தருளி ஆலய உட்பிரகா ரம் வலம் வந்தார். அதனை தொடர்ந்து மகா தீபாரா தனை காண்பி க்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News