பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
- பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- போலீசார் மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.
மதுரை
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அருளப்பன்(வயது53). இவர் கல்லூரி காம்பவுண்டு வளாகத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு அருளப்பன் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த 8½ பவுன் நகை, ரூ.85 ஆயிரம் ரொக்கம் மற்றும் சில்வர் பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய அருளப்பன் கதவு உடைக்கப்பட்டு நகை-பணம் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித் தனர். கொள்ளை தொடர் பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.