மதுரையை சேர்்ந்த மாணவ-மாணவிகள் பதக்கம் வென்று சாதனை
- முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
- மதுரையை சேர்்ந்த மாணவ-மாணவிகள் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
மதுரை
மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக முதல்-அமைச்சர் பதக்க விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு போட்டியில் 1970-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் 45 பரிசுகளில் மூன்றில் ஒரு பங்கு பரிசை இந்தியன் சிலம்பப்பள்ளி மாணவ-மாணவிகள் வென்றனர். இவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கல பரிசுகளை வென்று சாதனை படைத்தனர். கல்லூரி மாணவர் விஜய ராஜன் சுருள்வாள், ஒற்றைக் கம்பு விளையாட்டில் தங்கமும் வெள்ளி பதக்க மும், ஜெயக்குமார் அலங்காரவீச்சில் தங்கப்பதக்கம் வென்றார்.
அஜீதா இரட்டைக் கம்பு விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார். பள்ளிகள் அளவில் நடந்த சிலம்பாட்ட போட்டியில் பாலமுருகன் வெள்ளி பதக்கத்தையும், ஜாலினி வெள்ளிப்பதக்கமும், பொது பிரிவில் மாணவி ஏஞ்சலின் ஜெனிபர் வெண்கல பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தார். இவர்களில் நான்கு பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பரிசு பெற்ற மாணவ மாணவிகளை தலைமை பயிற்சியாளர் மாமல்லன் எஸ்.எம்.மணி, பயிற்சியாளர் வடிவேல், சந்திரா, ஒருங்கி ணைப்பாளர் நிஜாமுதீன், பயிற்சியாளர்கள் கராத்தே கண்ணன், கனிராஜ் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி னர்.