- தருமபுரி அருகே திருமணம் ஆன பெண் மாயமானார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள குருக்கலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 38), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா (29). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத் தன்று பவித்ரா நெருப்பூரில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுத்து வருவதாக அக்கம் பக்கத்தினரிடம் சொல்லி சென்று உள்ளார். மகன்கள் 3 பேரும் பள்ளிக்கு சென்று உள்ளனர். பின்னர் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்து அவர்கள் அம்மா பவித்ராவை தேடியுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. அம்மாவை காணாது சிறுவர்கள் தவித்து போய் அழுது உள்ளனர்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் பெங்களூரூவில் தங்கி கட்டிட வேலை பார்த்து வரும் ஆறுமுகத்துக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆறுமுகம், மனைவி பவித்ராவை உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடினார். அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.