உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Published On 2023-07-24 09:46 GMT   |   Update On 2023-07-24 09:46 GMT
  • மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும்
  • தொடர் மழையின் காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும். கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பில்லூர் அணை விளங்கி வருகிறது.

அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்ட த்தில் உள்ள குந்தா, அவலாஞ்சி, அப்பர் பவானி, குன்னூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் தொட ர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வ ரத்து தொடர்ந்து அதிக ரித்து வருகிறது.

தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உள்ளது. நீலகிரி மாவட்ட த்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் கார ணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று காலை ஆறு மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 86 அடியாக உள்ளது. தொடர் மழையின் காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விரைவில் பில்லூர் அணை நிரம்ப வாய்ப்புள்ளது.

தற்போது பவானி ஆற்றில் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படு வதால் கரையோர பகுதி களில் வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டுப்பா ளையம் ஓடத்துறை, லிங்கா புரம், சிறுமுகை, காந்தவ யல், ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பவானி ஆற்றில் குளிக்க வோ,துணி துவைக்கவும் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தி உள்ளனர். 

Tags:    

Similar News