உள்ளூர் செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தேனி மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம்

Published On 2023-10-24 07:38 GMT   |   Update On 2023-10-24 07:38 GMT
  • தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாளை தேனி மாவட்டத்துக்கு வருகை தருகிறார்.
  • நாளை காலை 10 மணிக்கு கம்பம் வரும் அமைச்சர் உதயநிதி தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

கம்பம்:

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாளை தேனி மாவட்டத்துக்கு வருகை தருகிறார்.

நாளை காலை 10 மணிக்கு கம்பம் நடராஜன் திருமண மண்டபத்துக்கு வரும் அமைச்சர் உதயநிதி தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து கம்பத்தில் வாசக சாலையை திறந்து வைக்கிறார்.

கம்பத்தில் இருந்து தேனிக்கு செல்லும் அமைச்சர் உதயநிதி அங்கு நடைபெறும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மதியம் 1 மணிக்கு அரசு விருந்தினர் இல்லத்துக்கு செல்கிறார். மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்ந்த வளர்ச்சி குறித்து கலந்துரையாடுகிறார்.

தேனி மாவட்டத்துக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.

Tags:    

Similar News