உள்ளூர் செய்திகள்
சாத்தூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி
- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று மதியம் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் சோலைச்சாமி (வயது 42), சந்திரசேகரன் (70). இவர்கள் 2 பேரும் இன்று மதியம் வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் சாத்தூருக்கு புறப்பட்டனர்.
சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.வெங்கடேசபுரம் பகுதியில் வந்தபோது நாகர்கோவிலில் இருந்து ஓசூர் சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சோலைச்சாமி, சந்திரசேகரன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த சோலைச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய சந்திரசேகரனை அந்த பகுதியினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.
விபத்து தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.