உள்ளூர் செய்திகள்
கடைவீதிகளில் வணிக உரிமை குறித்து நகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
வணிகம் உரிமம் குறித்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
- வேதாரணியம் நகராட்சியில் 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன
- வணிக உரிமம் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியில் வணிகம் உரிமம் குறித்து கடைகளில் அதிகாரிகள் சோதனையிட்டனர் வேதாரணியம் நகராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்த கடைகளில் நகராட்சியின் வணிக உரிமம் பெற்றுள்ளதா என நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் சுகாதார அலுவலர் ராஜாராமன் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கடைகடையாக சோதனை நடத்தினர் உரிமம் பெறாத வணிகர்கள் புகைப்படம் குடும்ப அட்டை ஜிஎஸ்டி நம்பர் பான் கார்டு ஆதார் அட்டை சொத்து வரி வசதி விசிட்டிங் கார்டு உள்ளிட்ட 7 ஆவணங்களுடன் http://tnUrban epay th.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.