நாமக்கல் அருகே மாவு மில்லில் பதுக்கிய 1,050 கிலோ ரேஷன் அரிசு பறிமுதல்
- உணவு கடத்தல் தடுப்பு காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் மற்றும் போலீசார் நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
- அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு காவல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் மற்றும் போலீசார் நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் சேந்தமங்கலம் போடி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (32) என்பதும் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
1050 கிலோ பறிமுதல்
இதையடுத்து பாண்டியனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின்பேரில் அவரது மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,050 கிலோ எடை கொண்ட 21 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.