உள்ளூர் செய்திகள்

விபத்து

தருமபுரி அருகே பஸ் மோதி டிரைவர் பலி

Published On 2022-06-09 11:12 GMT   |   Update On 2022-06-09 11:12 GMT
  • டிரைவர் விபத்தில் சிக்கி பலியானார்.
  • திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போது நேர்ந்த பரிதாபம்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், சின்னப்பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 24). லோடு ஆட்டோ டிரைவர்.

இவர் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். பட்டகப்பட்டி அருகே வந்த போது அந்த வழியாக வந்த பஸ் கோவிந்தராஜ் மீதுமோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News