உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது
- மாந்தோப்பில் ரோந்து சென்று சாராயம் விற்று வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
- 5 லிட்டர் சாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஜோகிப்பட்டி பகுதியில் சாராயம் விற்பதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீஸார் அப்பகுதியில் உள்ள மாந்தோப்பில் ரோந்து சென்று சாராயம் விற்று வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் ஜோகிப்பட்டி பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் ராஜசேகர் (வயது33) என தெரிய வந்தது.
இதனையடுத்து அவரிடம் இருந்த 5 லிட்டர் சாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
இது குறித்து மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து போச்சம்பள்ளி கோர்ட்டில் ராஜசேகரை ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.