உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகே 10 ஆடுகள் திருட்டு

Published On 2022-10-14 14:45 IST   |   Update On 2022-10-14 14:45:00 IST
மர்ம நபர்கள் திருடி சென்ற 19 ஆடுகளின் மதிப்பு சுமார் 60,000 என கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே சித்தலூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி உமா மகேஸ்வரி (வயது 30) இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து விட்டு வழக்கமாக வீட்டின் அருகில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டில் உறங்கினார். அதிகாலை எழுந்து பார்த்தபோது ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த பட்டி திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 8 ஆடுகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதேபோல் அருகில் உள்ள மற்றொருவர் பட்டியிலும் ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. மர்ம நபர்கள் திருடி சென்ற 19 ஆடுகளின் மதிப்பு சுமார் 60,000 என கூறப்படுகிறது. இதுகுறித்து உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News