உள்ளூர் செய்திகள்
விக்கிரவாண்டி அருகே கூலி தொழிலாளியிடம் செயின் வழிப்பறிமுகமூடி கொள்ளையனுக்கு வலை வீச்சு
- ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்
- சென்னை மடிப்பாக்கத்தில் தங்கி கட்டிட பணி செய்தனர்
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் (வயது 34). இவரது உறவினர் சுமதி (32). இருவரும் சென்னை மடிப்பாக்கத்தில் தங்கி கட்டிட பணி செய்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் விக்கிரவாண்டி தனியார் கல்லுாரி அருகே வந்த போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்ம ஆசாமி சுமதி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை அறுத்துக் கொண்டு தப்பிவிட்டார். இது பற்றி விக்கிரவாண்டி போலீசில் சுமதி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் போலீசார் வழக்கு பதிந்து முகமூடி கொள்ளையனை தேடி வருகின்றனர்.