விருத்தாசலம் அருகே மனைவியை இரும்பு தடியால் தாக்கிய கணவர் கைது
- விருத்தாசலம் அருகே மனைவியை இரும்பு தடியால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
- தகராறு முற்றி ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த மண்வெட்டியின் இரும்பு பிடியால் மனைவி குணசுந்தரி மீது சரமாரியாக தாக்கியுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்தியம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(37), இவரது மனைவி குணசுந்தரி (29). இருவருக்கும் திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது.இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று ஆடி ப்பெருக்கை முன்னிட்டு மணிகண்டனுக்கும் அவரது மனைவி க்குமிடையே நேற்றிரவு மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இந்த தகராறு முற்றி ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த மண்வெட்டியின் இரும்பு பிடியால் மனைவி குணசுந்தரி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த குணசுந்தரி வலியால் அலறி துடித்துள்ளார், அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்ப க்கத்தினர் குணசுந்தரியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனயைில் சிகிச்சையில் சேர்த்தனர்.இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.