காலை உணவை சாப்பிட்டு ஆய்வு செய்த அதிகாரிகள்.
திண்டுக்கல்லில் காலை உணவு தயாரிக்கும் கூடத்தில் அதிகாரிகள் ஆய்வு
- திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- கமிஷனர் உத்தரவின் பேரில் இன்று காலை மாநகர நல அலுவலர் உணவு தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு இந்த காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 16 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 1200 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
காலை உணவு திட்டத்திற்கு மேற்கு ரத வீதி நேருஜி நினைவு மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் உணவு கூடம் ஏற்பாடு செய்யப்பட்டு உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து 16 பள்ளிகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் இன்று காலை மாநகர நல அலுவலர் செபாஸ்டின் உணவு தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அட்டவ ணைப்படி அரிசி உப்புமா மற்றும் காய்கறியுடன் சாம்பார் தயாரிக்கப்பட்டு இருந்தது. இதனை சாப்பிட்டு ஆய்வு செய்தனர். மாணவ ர்களுக்கு வழங்கப்படும் உணவு, கவனமாகவும், தரமா னதாகவும் வழங்க வேண்டும். தொடர் மழை பெய்து வருவதால் சமையல் கூடத்தை எப்போதும் தூய்மை வைத்துக் கொள்ள அறிவுறுத்தினர்.