உள்ளூர் செய்திகள்

பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2023-09-25 12:39 IST   |   Update On 2023-09-25 12:39:00 IST
  • தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
  • பணி நிரந்தரம் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும்.

சென்னை:

தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

மாநில தலைவர் சேசுராஜா, மாநில செயலாளர் ராஜா தேவகாந்த், மாநில பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலையில் தொடர் உண்ணாவிரதம் நடந்தது.

தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

உடற்கல்வி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 12 ஆண்டுகளாக 16,459 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம்.

பணி நிரந்தரம் செய்யக் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த காலங்களில் முதல்வர், கல்வி அமைச்சர் கவனத்தை பெற கவன ஈர்ப்பு, காத்திருப்பு போராட்டம் நடைபெற்றும் எந்த பலனும் இல்லை. 12 ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் எங்களின் ஒற்றை கோரிக்கையான பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதம் இருக்கிறோம். பணி நிரந்தரம் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News