உள்ளூர் செய்திகள்
ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில் பட்டாபிஷேகம் மகோற்சவம்
- இங்கு தான் ராகவேந்திர சுவாமிகள் சன்னியாசம் பெற்றார்.
- புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில் பட்டாபிஷேகம் மகோற்சவம் விழாவை முன்னிட்டு 108கலச பூஜைகள் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வட வாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் மிகவும் பழைமையானது. இங்கு தான் ராகவேந்திர சுவாமிகள் சன்னியாசம் பெற்றார். மூல பிருந்தாவனம் செல்ல முடியாத பக்தர்கள் இந்த பிருந்தாவனத்தில் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இத்தகைய புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில் பட்டாபிஷேகம் மகோற்சவம் விழாவை முன்னிட்டு 108கலச பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் பட்டாபிஷேகம் மகோற்சவம் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.