உள்ளூர் செய்திகள்

காரைக்கால் பகுதி கிராமங்களில் 20 மணி நேர மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-09-29 12:46 IST   |   Update On 2022-09-29 12:46:00 IST
  • மின் துறை ஊழியர்கள் காலவறையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
  • வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.

புதுச்சேரி:

மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்த காரைக்காலில் மின் துறை ஊழியர்கள் காலவறையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்தப்போராட்டத்தால், காரைக்காலின் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டு, மின் ஊழியர்கள் அதனை சரி செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக, காரைக்காலின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகினர். அதேபோல், காரைக்கால் அருகே அம்பகரத்தூரில், நேற்று நள்ளிரவு 2 மணிக்கு ஏற்பட்ட மின்தடை பகல் 2.30 மணிவரை சரிசெய்யப்ப டவில்லை யென கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் தண்ணீர் விநியோகமும் தடைபட்டது. வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். 

தொடர்ந்து, அத்திர மடைந்த வியாபாரிகள், பொதுமக்கள் அம்பகரத்தூர் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த திருநள்ளாறு போலிசார், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், சம்பவ இடத்திற்குசென்று, மின் ஊழியர்களிடம் பேசுவதாகவும், தண்ணீர் விநியோகத்தை டீசல் மின் மோட்டார் மூலம் சரி செய்வதாக உறுதியளித்ததையடுத்து, பொது மக்கள் சாலைமறியலை கைவிட்டு சென்றனர்.

Tags:    

Similar News