குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
- பொதுமக்கள் செல்லும் சிவவேங்கடபுரம் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
- இரவு நேரங்களில் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குண்டு குழியுமாக உள்ள பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர்.
கூடுவாஞ்சேரி:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட குட்வில் நகர், சிலம்பொலி நகர், சஞ்சய் நகர், ராம் நகர் ஆகிய பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்பு சேர்ந்த பொதுமக்கள் செல்லும் சிவவேங்கடபுரம் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வாகன ஓட்டிகள் உட்பட பலரும் தினந்தோறும் அவதிப்பட்டு செல்கின்றனர்.
இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குண்டு குழியுமாக உள்ள பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். எனவே மிகவும் மோசமான உள்ள இந்த சாலையை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரி செய்வதற்கு காயரம்பேடு ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.