உள்ளூர் செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Published On 2022-11-09 09:31 GMT   |   Update On 2022-11-09 09:32 GMT
  • மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
  • வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர வலியுறுத்தல்

பெரம்பலூர்

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் சலுகையினை ரத்து செய்ய விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மேற்பார்வை மின்பொறியாளர் அம்பிகா தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள், மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு மின் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ள நிலையில் மேலும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கிட இலக்கீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பெரம்பலூர் வசூல் மையத்தில் ஒருவர் மட்டும் மின்கட்டணம் வசூல் செய்து வருவதால் மின் நுகர்வோர்கள் அதிக நேரம் காத்திருத்து மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. ஆகையால் ஏற்கனவே இருந்தது போல் 3 பேரை வசூல் மையத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

ஒருவர் பல வீட்டு மின்இணைப்பு பெற்று, அதில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் 100 யூனிட் இலவச மின்சாரம் சலுகையினால் பயனடைந்து வருகின்றார்கள். தற்பொழுது 100 யூனிட் இலவச மின்சாரம் பெற்று வரும் சலுகைகளை ரத்து செய்து பொது பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்ய இருக்கும் தமிழக மின்துறை அமைச்சரின் முடிவு நியாயமில்லை. இதுபற்றி விசாரணை செய்து மின்நுகர்வோர் நலன் காக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவினை பெற்றுக்கொண்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News