உள்ளூர் செய்திகள்
மதுக்கடையால் பெண்களுக்கு இடையூறு
- மதுக்கடையால் பெண்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- கடையை அகற்ற வேண்டும்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் ஊருக்கு அருகே டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தும் மதுப்பிரியர்கள் இந்த பகுதி வழியாக செல்லும் பெண்கள், மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.