உள்ளூர் செய்திகள்

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அமைச்சரிடம் மனு

Published On 2023-01-05 07:16 GMT   |   Update On 2023-01-05 07:16 GMT
  • பொய்யான தகவலை பரப்புவார்கள் மீது சட்ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • துணை தலைவர் செந்தில் என்கிற பழனிசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் 

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை, மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச.இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- மின்சார வாரியத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக காலி பணியிடங்களை நிரப்ப வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் விரைவாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தமிழ்நாடு மின்சார மின்சார வாரிய அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

அவர்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொய்யான தகவலை பரப்புவார்கள் மீது சட்ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதில் மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. தலைவர் பண்டிததுறை, துணை தலைவர் செந்தில் என்கிற பழனிசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News