மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்ட காட்சி.
கருக்கலைப்பு மாத்திரை விற்ற மருந்து கடைக்கு சீல்
- அவருக்கு ரத்த போக்கு அதிகமாகி உடல் நலன் பாதிக்கப்பட்டது.
- சிகிச்சையளித்தும் பலனிக்காமல் கடந்த 17-ம் தேதி உயிரிழந்திருக்கிறார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேயுள்ள பனைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்ஸ்ரீ (வயது 22).
இவர் கருவுற்றிருந்த நிலையில் கருவை கலைக்க கடந்த 15-ம்தேதி மெடிக்கல் ஸ்டோரில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ரத்த போக்கு அதிகமாகி உடல் நலன் பாதிக்கப்பட்டது.
எனவே ஜெய்ஸ்ரீ முதலில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகி்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்தும் பலனிக்காமல் கடந்த 17-ம் தேதி உயிரிழந்திருக்கிறார்.
இது தொடர்பாக தகவலறிந்த தருமபுரி மாவட்ட சுகாதாரத்துறை நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, தருமபுரி சரக மருந்துகள் ஆய்வாளர் சந்திரா மேரி உள்ளிட்ட மருத்துவ துறை அதிகாரிகள் சம்மந்தபட்ட மெடிக்கல் ஸ்டோரில் ஆய்வு மேற்கொண்டனர்
கருக்கலைப்பிற்கான மாத்திரை விற்பனை செய்தது உறுதியானதை தொடர்ந்து அந்த மெடிக்கல் ஸ்டோரை மூடி சீல் வைத்து அதை நடத்தி வந்த செல்வராஜ் என்பவரை கைது செய்தனர்.