உள்ளூர் செய்திகள்

திருவிருத்தான்புள்ளி ஊராட்சிப்பகுதியில் முன்னோடி மனுநீதிநாள் முகாம் - நாளை மறுநாள் நடக்கிறது

Published On 2023-10-17 14:46 IST   |   Update On 2023-10-17 14:46:00 IST
  • முகாமில் சேரன்மகா தேவி சப்-கலெக்டர், தனித்துணை கலெக்டர் ஆகியோர் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படும்.
  • முகாம் முடிந்த உடன் அன்று பிற்பகல் அக்கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மேற்படி குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

நெல்லை:

சேரன்மகாதேவி வட்டம் திருவிருத்தான்புள்ளி ஊராட்சிப் பகுதியில் மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்னோடியாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) 1 திருவிருத்தான்புள்ளி பகுதி-2 கிராமம், கங்கனாங்குளம் அரசு திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மனுக்கள் பெறப்பட உள்ளன.

இந்த முகாமில் சேரன்மகா தேவி சப்-கலெக்டர், தனித்துணை கலெக்டர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகிேயார் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படும். முகாம் முடிந்த உடன் அன்று பிற்பகல் அக்கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மேற்படி குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

எனவே ஆய்வுக் குழுவிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார். 

Tags:    

Similar News