உள்ளூர் செய்திகள்

பாரம்பரிய மருத்துவ அறிவை ஆவணப்படுத்துதல், மதிப்பீடு செய்தல் பயிற்சி

Published On 2022-07-28 10:04 GMT   |   Update On 2022-07-28 10:04 GMT
  • மருத்துவர்கள் மருத்துவ அறிவை ஆவணப்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் பயிற்சி கோத்தகிரியில் நடைபெற்றது.
  • தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பாரம்பரிய மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

அரவேணு:

பாரம்பரிய பழங்குடி இன மருத்துவர்கள் மருத்துவ அறிவை ஆவணப்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் பயிற்சி கோத்தகிரியில் நடைபெற்றது. பழங்குடியினர் மக்களின் பாரம்பரிய மருத்துவ அறிவை ஆவணப்படுத்தும் மற்றும் மதிப்பீடு செய்வது குறித்த பயிற்சி கோத்தகிரியில் உள்ள தென்பாஸ்கோ வளாகத்தில் நடைபெற்றது.


இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பாரம்பரிய மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில் பங்கேற்ற அனைவரையும் திட்ட மேலாளர் பாலசு ப்ரமணியம் அனைவரையும் வரவேற்றார்.பெங்களூர் பல்துறை சுகாதார விஞ்ஞா னியும், தொழில்நுட்ப பல்கலைக்கழக உதவி பேராசிரியருமான முனைவர் பிரகாஷ் மற்றும் முனைவர் ஹரே ராமமூர்த்தி தமிழ்நாடு பாரம்பரிய சித்த மருத்துவர்களின் மகா சங்கத் தலைவர் கமனந்தன் கார்டன் ஆப் அறக்கட்டளையின் பண்டைய பழங்குடி மக்களின் மூலிகை அறிவை புதுப்பிக்கும் திட்டத்தின் மேலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.


கார்டன் ஆப் அறக்கட்டளை மேலா ண்மை அறங்காவலர் லட்சுமி நாராயணன், திட்ட மேலாளரும், நீலகிரி இயற்கை மேலாண்மை தலைவருமான சிவக்குமார், தன்போஸ்கோ இயக்குனர் அருட்தந்தை ராபர்ட் ஆகியோ ர் கலந்து கொண்டனர். முடிவில் பாரம்பரிய மருத்துவர் தனலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News